மேலும் செய்திகள்
காங்காதீஸ்வரர் கோவிலில் புதிய தேர் வெள்ளோட்டம்
08-Nov-2024
சின்னசேலம்; சின்னசேலத்தில் பஸ் நிலையத்திற்கு, பூமி பூஜை நடந்தது.சின்னசேலத்தில் 1.98 கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக பஸ் நிலையம் கட்ட திட்டமிடப்பட்டது. இதற்கான பூமி பூஜை நேற்று முன்தினம் நடந்தது. நிகழ்ச்சிக்கு, கலக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். பேரூராட்சி சேர்மன் லாவண்யா ஜெய்கணேஷ் முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் கணேசன் வரவேற்றார்.சிறப்பு விருந்தினர் உதயசூரியன் எம்.எல்.ஏ., பணிகளை துவங்கி வைத்தார். நிகழ்ச்சியில் துணை சேர்மன் அண்புமணிமாறன், இளைஞரணி அமைப்பாளர் அருள், கவுன்சிலர்கள் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். பேரூராட்சி துணை சேர்மன் ராகேஷ் நன்றி கூறினார்.
08-Nov-2024