மேலும் செய்திகள்
மது பாட்டில் விற்றவர் கைது
06-Nov-2024
சின்னசேலம் ; சின்னசேலம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட 15 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.சின்னசேலம் அடுத்த தென்சிறுவள்ளூர் கிராமத்தில் 4வது வார்டில் முறையாக குடிநீர் வழங்கவில்லை. அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் 4வது வார்டு பெரியசாமி தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் அம்மகளத்துார் - நாட்டார்மங்கலம் சாலையில் தென்சிறுவள்ளூர் கூட்ரோடு அருகே நேற்று முன்தினம் காலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இது குறித்து கிராம நிர்வாக அலுவலர் சங்கர் அளித்த புகாரின் பேரில் கீழ்குப்பம் போலீசார் வார்டு உறுப்பினர் ராஜா உட்பட 15 பேர் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
06-Nov-2024