உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / தம்பதி மீது தாக்குதல்; 3 பேர் மீது வழக்கு பதிவு

தம்பதி மீது தாக்குதல்; 3 பேர் மீது வழக்கு பதிவு

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி அருகே கணவன், மனைவியை தாக்கிய மூன்று பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி அடுத்த நாகலுார் சேர்ந்தவர் ராஜேந்திரன், 52; இவருக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார் மகன் சிவா, 25; என்பவருக்கும், கோவில் திருவிழாவின் போது தகராறு ஏற்பட்டது. இந்நிலையில், கடந்த 3ம் தேதி மாலை இரு குடும்பத்தினர் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அதில் ஆத்திரமடைந்த சிவா, அவரது தந்தை செந்தில்குமார், தாய் பச்சையம்மாள் ஆகியோர் சேர்ந்து ராஜேந்திரன், அவரது மனைவி அபிராமி உளிட்ட மூன்று பேரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீசார் சிவா, செந்தில்குமார், பச்சையம்மாள் ஆகியோர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை