மேலும் செய்திகள்
ரூ.1.60 கோடிக்கு நலத்திட்ட உதவி வழங்கல்
28-May-2025
விழுப்புரம் மாவட்டத்தில் கிராம சபை கூட்டம்
02-May-2025
Match ஒன்று Qualifiers மூன்று DCvsGT
19-May-2025
கள்ளக்குறிச்சி: திருநாவலுார் ஊராட்சி ஒன்றிய கிராமங்களில், ரூ.1.60 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.உளுந்துார்பேட்டை அடுத்த திருநாவலுார் ஊராட்சி ஒன்றியம் மதியனுார், ஆண்டிக்குடி, திருநாவலுார், சேந்தமங்கலம், பாதுார் ஆகிய கிராமங்களில் மக்களுடன் முதல்வர் முன்றாம் கட்ட சிறப்பு முகாம் நேற்று நடந்தது. கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் உதயசூரியன், மணிக்கண்ணன் முன்னிலை வகித்தனர். தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசன் பங்கேற்று முகாமை துவக்கி வைத்தார். தொடர்ந்து, 8 ஊராட்சிகளில் அரசின் பல்வேறு துறைகளின் மூலம் 1,498 பயனாளிகளுக்கு, ரூ.1.60 கோடி மதிப்பில், நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில், டி.ஆர்.ஓ., ஜீவா, சப் கலெக்டர் ஆனந்தகுமார்சிங், திட்ட இயக்குனர் ரமேஷ்குமார், ஒன்றிய சேர்மன் சாந்தி, துணை சேர்மன் ராமலிங்கம், மாவட்ட கவுன்சிலர் வசந்தவேல், தி.மு.க., ஒன்றிய செயலாளர் முருகன், நகராட்சி சேர்மன் திருநாவுக்கரசு, துணை சேர்மன் வைத்தியநாதன், ஒன்றிய சேர்மன் ராஜவேல், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் டேனியல் ராஜ் பங்கேற்றனர். மேலும் வேளாண் இணை இயக்குனர் சத்யமூர்த்தி, கூட்டுறவு துறை இணைப்பதிவாளர் முருகேசன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சுமதி, பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் கீதா, தாசில்தார் அனந்தகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
28-May-2025
02-May-2025
19-May-2025