உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மக்களுடன் முதல்வர் திட்டம் 3ம் கட்ட சிறப்பு முகாம்

மக்களுடன் முதல்வர் திட்டம் 3ம் கட்ட சிறப்பு முகாம்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்டம் மூன்றாம் கட்ட சிறப்பு முகாம் வரும் 8 மற்றும் 9 ம் தேதி நடக்க உள்ளதாக, கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள செய்திகுறிப்பு: மாவட்டத்தில் நகர்ப்புற மற்றும் ஊரகப் பகுதிகளில், மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் இரண்டு கட்டங்களாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மூன்றாம் கட்டமாக விளிம்பு நிலையிலுள்ள மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடத்தப்படுகிறது. அதன்படி, கள்ளக்குறிச்சி தொகுதியில் வரும் 8 மற்றும் 9ம் தேதிகளில் நடக்கிறது. இதில், 8ம் தேதி கள்ளக்குறிச்சி ஒன்றியத்தில் நீலமங்கலம், தென்கீரனுார், சிறுவங்கூர், பெறுவங்கூர், தியாகதுருகம் ஒன்றியத்தில், முடியனுார் ஆகிய கிராமங்களில் நடக்கிறது. தொடர்ந்து, 9 ம் தேதி தியாகதுருகம் ஒன்றியத்தில் கூத்தக்குடி, வடதொரசலுார், குடியநல்லுார், கள்ளக்குறிச்சி ஒன்றியத்தில் தென்சிறுவலுார், சின்னசேலம் ஒன்றியத்தில் நைனார்பாளையம் கிராமங்களில் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. முகாமை அமைச்சர் வேலு துவக்கி வைத்து, மனுக்களை பெற்று பயனாளிளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க உள்ளார். பொதுமக்கள் மனுக்களை வழங்கி தீர்வு பெறலாம்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ