அன்பு கரங்கள் நிதி ஆதரவு திட்டத்தில் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் கலெக்டர் அறிவிப்பு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஆதரவற்ற குழந்தைகள் அன் பு கரங்கள் நிதி ஆதரவு திட்டத்தின் கீழ் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கலெக்டர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு; கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இரண்டு பெற்றோரையும் இழந்து உற வினர்கள் பாதுகாப்பில் வளரும் குழந்தைகள் மற்றும் ஒரு பெற்றோர் இறந்து, மற்றொரு பெற்றோரால் பராமரிக்க இயலாத குழந்தைகளுக்கு அன்பு கரங்கள் நிதி ஆதரவு திட்டத்தின் கீழ், 18 வயது வரை மாதந்தோறும் ரூ. 2 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படுகிறது. இதில், ஆதரவற்ற குழந்தைகள் (பெற்றோர் இருவரையும் இழந்தவர்கள்), கைவிடப்பட்ட குழந்தைகள் (பெற்றோரில் ஒருவர் இறந்து, மற்றொருவர் குழந்தையை கைவிட்டுச் சென்று இருப்பின்), ஆதரவு தேவைப்படும் குழந்தைகள் (பெற்றோரில் ஒருவர் இறந்து, மற்றொரு பெற்றோர் மாற்றுத்திறன் தன்மை கொண்டவர், சிறையில் இருந்தால், உயிருக்கு ஆபத்தான நோய்களுடன் வாழ்ந்து வருவோர்) ஆகியோர் பயன்பெறலாம். மாவட்டத்தில் நடக்கும் உங்களுடன் ஸ்டாலின் முகாம் அல்லது மாவட்ட கலெக்டர், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஆகியோரிடம் வி ண்ணப்பிக்கலாம். ரேஷன் கார்டு, குழந்தையின் ஆதார் கார்டு, வயது சான்று, குழந்தையின் வங்கி கணக்கு புத்தகம், பெற்றோரின் இறப்பு, வருமானம், சாதி சான் றிதழ் உள்ளிட்ட ஆவணங்களின் நகல்களு டன் விண்ணப்பம் செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.