உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மாவட்ட வளர்ச்சி திட்ட பணி நேரில் ஆய்வு செய்த கலெக்டர்

மாவட்ட வளர்ச்சி திட்ட பணி நேரில் ஆய்வு செய்த கலெக்டர்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் பத்மஜா நேரில் ஆய்வு செய்தார். கள்ளக்குறிச்சியில் பெரிய ஏரி துார் வாரும் பணி, ஏரிக்கரையை பலப்படுத்தும் பணிகளை நேரில் ஆய்வு செய்த கலெக்டர் பத்மஜா, ஏரியின் கொள்ளளவு உயர்வதுடன், தொடர்ந்து நிலத்திட் நீர் செறிவூட்டல் அதிகரித்து கள்ளக்குறிச்சி நகரப்பகுதி மக்கள் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படும். மேலும் ஏரியின் ஆயக்கட்டு பகுதி பாசன நிலங்களும் பயன்பெறும். இப்பணி பெருநிறுவன சமூக பொறுப்பு நிதியின்கீழ் செயலாக்கத்திற்கு எடுத்து கொள்ளப்பட்டது என கலெக்டர் தெரிவித்தார். தொடர்ந்து பணிகளை துரிதமாக முடித்திட வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து கள்ளக்குறிச்சி சமூக நீதி பெண்கள் விடுதியை நேரில் பார்வையிட்டு மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம், குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை முறையாக மேற்கொள்ள விடுதி காப்பாளர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார். ஆய்வின்போது சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ