உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / 4 தாலுகாக்களில் வானவில் மையம் கலெக்டர் பிரசாந்த் தகவல்

4 தாலுகாக்களில் வானவில் மையம் கலெக்டர் பிரசாந்த் தகவல்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், 4 இடங்களில் வானவில் மையங்கள் செயல்பட்டு வருவதாக, கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார். அவரது செய்திக்குறிப்பு:மாவட்டத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ், வானவில் மையங்கள் உளுந்துார்பேட்டை, சின்னசேலம், திருநாவலுார் மற்றும் தியாகதுருகம் தாலுகாக்களில் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.உளுந்துார்பேட்டை, பிடாகம் ஊராட்சியில் - 04149 222102; சின்னசேலம், அம்மையகரம் ஊராட்சியில் கிராம சேவை மைய கட்டடம்-04151 256260; திருநாவலுார் வட்டாரம், நகர் ஊராட்சி கிராம சேவை மைய கட்டடம்-04149 291688; தியாகதுருகம் வட்டார இயக்க மேலாண்மை அலகு-04151 233260; ஆகிய இடங்களில் பாலின வள மையங்கள் செயல்படுகின்றன.உரிமைகள், மருத்துவம், உளவியல், சட்டம், தங்குமிடம், மறுவாழ்வு மற்றும் பிற ஆலோசனை ஆதரவு போன்றவற்றை ஒரே குடையின் கீழ் கிராமப்புற பெண்கள் மற்றும் பாதிக்கப்பட்ட பிரிவினருக்கு ஒருங்கிணைந்த ஆதரவு, சேவைகள் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்குவது இதன் நோக்கம். மாவட்டத்தில் சம்மந்தப்பட்ட வட்டாரங்களில் உள்ள சுய உதவிக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர், இதை பயன்படுத்தி கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ