உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / தாட்கோ தொழில் மானிய நிதியை கலெக்டர் வழங்கல்

தாட்கோ தொழில் மானிய நிதியை கலெக்டர் வழங்கல்

கள்ளக்குறிச்சி,: தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் தொழில் முனைவு திட்டத்திற்கு விண்ணப்பிக்க கலெக்டர் பிரசாந்த் அழைப்பு விடுத்துள்ளார். கள்ளக்குறிச்சி, கலெக்டர் அலுவலகத்தில் தாட்கோ திட்டம் மூலம் செயல்படுத்தப்படும், சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான, தொழில் முனைவு திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு மானிய நிதி உதவி தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். இதில் உளுந்துார்பேட்டை அடுத்த டி.ஒரத்துாரை சேர்ந்த ரகுநாத் என்பவருக்கு கார் வாங்க மானியமாக, 2 லட்சத்து 62 ஆயிரத்து 500 ரூபாய்க்கான காசோலை வழங்கி, கலெக்டர் கூறியதாவது: இந்த திட்டத்தின் கீழ் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் சமுதாயத்தை சேர்ந்த தொழில் முனைவோருக்கு திட்ட மதிப்பில், 35 சதவீதம் அல்லது அதிகபட்சம், ரூ.3.50 லட்சத்தில், எது குறைவானதோ அது மானியமாக விடுவிக்கப்படும். 6 சதவீதம் வட்டி மானியமும் வழங்கப்படும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கும் குறைவாக உள்ள, 18-லிருந்து ௫௫வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கூறினார். இதில் மாவட்ட தாட்கோ மேலாளர் பியர்லின் உடன் இருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை