வனப்பரப்பை அதிகரிக்க கலெக்டர் வலியுறுத்தல்
சங்கராபுரம்: சங்கராபுரம் ஊராட்சி ஒன்றியத்தில், வளர்ச்சித் திட்டப்பணிகளை கலெக்டர் பிரசாந்த் நேற்று ஆய்வு செய்தார்.ஆரூர் ஊராட்சியில் புதிய மரக்கன்றுகள், நாற்றங்கால் உற்பத்தி பண்ணை, வடபொன்பரப்பி தார் சாலை, அருளம்பாடி கிராமத்தில் மணலுார் முதல் வடகீரனுார் வரையிலான சாலை பணிகளின் தரம் குறித்து ஆய்வு செய்தார்.பொரசப்பட்டு கிராமத்தில் நாற்றங்கால் பண்ணை, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி பணிகள், ராவுத்தநல்லுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மதிய உணவின் தரத்தை சாப்பிட்டு ஆய்வு செய்தார். அங்கு உலர்களம், பூட்டை கிராம பாலப்பணி விபரங்களை கேட்டறிந்தார்.பணிகளை தரமாக மேற்கொள்ளவும், கிராமப்பகுதிகளில் மரக்கன்றுகளை நடவும், அலுவலர்களிடம் அறிவுறுத்தினார். ஆய்வில் பி.டி.ஓ.,க்கள் அய்யப்பன், ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.