மேலும் செய்திகள்
ஊரக வளர்ச்சி பணிகள்: கலெக்டர் உத்தரவு
03-May-2025
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் புதிய கலெக்டர் அலுவலக கட்டுமான பணிகளை கலெக்டர் ஆய்வு செய்து விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.கள்ளக்குறிச்சி அடுத்த வீரசோழபுரம் கிராமத்தில் பொதுப்பணித் துறை சார்பில் 8 தளங்களைக் கொண்டு 35.18 ஏக்கர் பரப்பளவில் 139.41 கோடி ரூபாய் மதிப்பில் புதிய கலெக்டர் அலுவலகம் கட்டப்பட்டு வருகிறது. கட்டடப் பணியை நேற்று முன்தினம் கலெக்டர் பிரசாந்த் ஆய்வு செய்தார்.அப்போது, பணிகளை தரமாகவும் விரைவாகவும் முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
03-May-2025