உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  கல்லுாரி மாணவி மாயம்

 கல்லுாரி மாணவி மாயம்

சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே மாயமான கல்லுாரி மாணவியை போலீசார் தேடி வருகின்றனர். சங்கராபுரம் அடுத்த மூக்கனுார் கிராமத்தை சேர்ந்தவர் அய்யனார் மகள் சந்தியா,19; இவர் விரியூரில் உள்ள தனியார் கல்லுாரி முதலாமாண்டு மாணவி. நேற்று காலை வழக்கம் போல் கல்லுாரிக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் கிடைக்காததையடுத்து போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ