உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கள்ளச்சாராய வழக்கில் பொதுமக்கள் கருத்து தெரிவிக்க ஆணையம் அழைப்பு

கள்ளச்சாராய வழக்கில் பொதுமக்கள் கருத்து தெரிவிக்க ஆணையம் அழைப்பு

கள்ளக்குறிச்சி : கள்ளச்சாராய பலி வழக்கில் கைதான 8 பேரிடம் ஒரு நபர் ஆணைய தலைவர் நேற்று விசாரணை மேற்கொண்டார்.கள்ளக்குறிச்சி பகுதியில் கடந்த ஜூன் 19ம் தேதி மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்து 68 பேர் பலியான சம்பவம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஒரு நபர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இவ்வழக்கில் 24 பேரை சி.பி.சி.ஐ.டி., போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கில் கைதாகி சிறையில் உள்ளவர்களிடம், கடந்த 14ம் தேதி ஒருநபர் ஆணைய விசாரணை தொடங்கியது. தினமும் 8 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.மூன்றாவது நாளான நேற்று ஏழுமலை, சடையன், செந்தில், ரவி, பரமசிவம், முருகேசன், ராமர், வேலு ஆகிய 8 பேரிடம் விசாரணை செய்யப்பட்டது.வரும் 21, 22,23 ஆகிய தேதிகளில் பொதுமக்கள், சமூக அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஆணைய முகாம் அலுவலகத்தில் நேரில் ஆஜராகி, கள்ளச்சாராயம் சம்பவம் தொடர்பான தங்களது கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி