சமுதாய ஒற்றுமை விழிப்புணர்வு கூட்டம்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் அரசின் கலை பண்பாட்டுத்துறை, தஞ்சாவூர் மண்டல கலை பண்பாட்டு மையம் சார்பில் கலை பயிற்சி பட்டறை மற்றும் நாட்டுப்புற கலைஞர்கள் மூலம் சமுதாய ஒற்றுமை ஏற்படுத்துவது குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு, ஜவகர் சிறுவர் மன்ற திட்ட அலுவலர் கவுதம் தலைமை தாங்கினார். தஞ்சாவூர் மண்டல கலை பண்பாட்டு மைய உதவி இயக்குநர் ராஜாராமன், நாட்டுப்புற கலைகளின் முக்கியத்துவம் குறித்து பேசினார். தொடர்ந்து, தவில், தெருக்கூத்து, நாதஸ்வரம் உள்ளிட்ட கலைகளுக்கான பயிற்சி அளிக்கப்பட்டு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. குடும்ப ஓய்வூதியம் கேட்டு விண்ணப்பித்திருந்த கலைஞர்களிடம் தஞ்சாவூர் மண்டல கலை பண்பாட்டு மைய உதவி இயக்குநர் ராஜாராமன் நேர்காணல் நடத்தி ஓய்வூதியம் கிடைக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். தஞ்சாவூர் ஜவகர் சிறுவர் மன்ற திட்ட அலுவலர் வடிவேல், நாட்டுப்புற கலைஞர்கள் மாரியாப்பிள்ளை, சுப்ரமணியன், சிவப்பிரகாசம், ஆண்டி, சந்திரசேகரன், கருப்பையா உட்பட பலர் பங்கேற்றார்.