உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பணி நிறைவு பாராட்டு விழா

பணி நிறைவு பாராட்டு விழா

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் காவல் நிலையத்தில் பணிபுரிந்த சப் இன்ஸ்பெக்டருக்கு பணி ஓய்வு பாராட்டு விழா நடந்தது. திருக்கோவிலுார் காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் செல்வம். இவர், ஓய்வு பெறுவதை ஒட்டி தனியார் திருமண மண்டபத்தில் பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது. சப் இன்ஸ்பெக்டர் நரசிம்ம ஜோதி வரவேற்றார். இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் பாராட்டி பேசினார். செல்வம் ஏற்புரையாற்றினார். நிகழ்ச்சியில் போலீசார் மற்றும் செல்வத்தின் குடும்பத்தினர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை