உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / காங்., பேச்சுப் போட்டி பரிசளிப்பு விழா

காங்., பேச்சுப் போட்டி பரிசளிப்பு விழா

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் காங்., சார்பில் மறைந்த நடிகர் சிவாஜி கணேசன் பிறந்த நாளையொட்டி நடந்த பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு, மாவட்ட தலைவர் இதாயத்துல்லா தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட தலைவர்கள் தனபால், இளையராஜா, கலைப் பிரிவு மாவட்ட தலைவர் கலியமூர்த்தி முன்னிலை வகித்தனர். நகர பொறுப்பாளர் திருப்பதிராஜ் வரவேற்றார். சிவாஜி கணேசனின் 99வது பிறந்தநாள் விழாவையொட்டி அவரது தேசப்பற்று, கட்சிப்பணி, தமிழர் பண்பாடு, நடிப்பாற்றல் உள்ளிட்ட தலைப்புகளில் பேச்சுப் போட்டி நடந்தது. இதில் பங்கேற்ற மாணவர்களுக்கு சான்றிதழும், முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு பரிசுத் தொகை மற்றும் கேடயமும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாநில பொதுக்குழு உறுப்பினர் தேவராஜ், வட்டார தலைவர்கள் சரண்ராஜ், நாராயணன், பிரபு, செல்வராஜ் உட்பட பலர் பங்கேற்றனர். இளைஞர் காங்., நிர்வாகி குணதீபன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ