கள்ளக்குறிச்சி அரசு கல்லுாரியில் முதுகலை படிப்பிற்கு இன்று கலந்தாய்வு
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அரசு கல்லுாரியில் முதுகலை பாடப்பிரிவுகளுக்கான முதலாமாண்டு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்று நடக்கிறது. கள்ளக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதல்வர் தருமராஜா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு; கல்லுாரியில் எம்.ஏ., ஆங்கிலம், எம்.காம், வணிகவியல், எம்.எஸ்சி., கணிதம், கணினிஅறிவியல் ஆகிய 4 பாடப்பிரிவுகள் உள்ளன. இதில், முதலாமாண்டு சிறப்பு பிரிவு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்று 11ம் தேதி நடக்கிறது. அதேபோல், பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நாளை மறுநாள் 13ம் தேதி நடக்கிறது. மாணவர்கள் விண்ணப்பம் நகல், கலந்தாய்வு அழைப்பு கடிதம், பத்தாம் வகுப்பு, பிளஸ்1, பிளஸ்2 மற்றும் இளங்கலை மதிப்பெண் சான்றிதழ்கள், ஜாதிச்சான்று, மாற்றுச்சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகம், புகைப்படங்கள் எடுத்து வரவேண்டும், சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்ட பிறகு சேர்க்கை உறுதி செய்யப்படும். தாமதமாக வரும் மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்க முடியாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.