உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மின் வேலியில் சிக்கிய தம்பதி காயம்: இருவர் கைது

மின் வேலியில் சிக்கிய தம்பதி காயம்: இருவர் கைது

உளுந்துார்பேட்டை : மின்வேலியில் சிக்கி தம்பதி படுகாயமடைந்த வழக்கில் இருவரை போலீசார் கைது செய்தனர்.உளுந்துார்பேட்டை அடுத்த பாண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோதண்டபாணி,50; தனது நிலத்தில் உளுந்து பயிரிட்டுள்ளார். இந்நிலையில் இவரது உறவினரான வேல்முருகன், நேற்று முன்தினம் இரவு இயற்கை உபாதைக்காக கோதண்டபாணி நிலத்திற்கு சென்றார்.அப்போத, அங்கு பயிர்களை வனவிலங்குகள் சேதப்படுத்துவதை தடுக்க வைத்திருந்த மின்வேலியில் சிக்கி கூச்சலிட்டார். அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அவரது மனைவி கோதாவரி,38; மின் வேலியில் சிக்கினர். உடன் அருகில் இருந்தவர்கள், மின்சாரத்தை துண்டித்து இருவரையும் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதுகுறித்து உளுந்துார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து மின்வேலி அமைத்த கோதண்டபாணி மற்றும் அவரது சகோதரர் அன்பழகன்,38; ஆகியோரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !