மேலும் செய்திகள்
பைக் மீது பஸ் மோதி வாலிபர்கள் இருவர் பலி
30-Sep-2025
உளுந்துார்பேட்டை: அக். 24-: திருநாவலுார் அருகே ஓடையில் பாய்ந்த காரில் இருந்த தம்பதி காயமின்றி தப்பினர். சேலம் மாவட்டம், ஆத்துார் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் மகன் அஸ்வின், 36; இவர் உடல் நிலை சரியில்லாத மனைவி ஜனனியை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். நேற்று அவரை அழைத்து கொண்டு புதுச்சேரியில் இருந்து சேலத்திற்கு 'மோரிஸ் கரேஜஸ்' (எம்ஜி) காரில் சென்றனர். காரை அஸ்வின் ஓட்டினார். பிற்பகல் 3:30 மணியளவில் உளுந்துார்பேட்டை அடுத்த மேட்டாத்துார் ஓடை பாலம் அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த கார், தேசிய நெடுஞ்சாலையோர ஓடை நீரில் பாய்ந்து விபத்துக்குள்ளானது. உடன் அங்கிருந்தவர்கள் காரில் இருந்த அஸ்வின், ஜனனி ஆகியோரை பத்திரமாக மீட்டனர். இருவரும் காயமின்றி தப்பினர். திருநாவலுார் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காரை மீட்டு விசாரித்து வருகின்றனர்.
30-Sep-2025