மேலும் செய்திகள்
கொலை மிரட்டல் வழக்கு
09-Sep-2025
உளுந்தூர்பேட்டை; இளம்பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த இருவர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். உளுந்தூர்பேட்டை அடுத்த காம்பட்டு பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் மகள் ஜெயப்பிரியா,19; இவர் கடந்த 7ம் தேதி மாலை 6:00 மணியளவில் அதே பகுதியில் புறம்போக்கு நிலத்தில் உள்ள பொது வழியை ஜே.சி.பி., இயந்திரத்தின் மூலம் சுத்தம் செய்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த முத்து மகன் நடராஜன் மற்றும் நடராஜன் மகன் மணிகண்டன் ஆகிய இருவரும் சேர்ந்து ஜெயபிரியாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து ஜெயப்பிரியா அளித்த புகாரின் பேரில் உளுந்தூர்பேட்டை போலீசார் நடராஜன், 61; மணிகண்டன், 24; ஆகிய இருவர் மீது வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
09-Sep-2025