மேலும் செய்திகள்
'மாஜி' அமைச்சர் மீது அவதுாறு : அ.தி.மு.க., மனு
23-Jul-2025
கள்ளக்குறிச்சி; ம.தி.மு.க., தலைவர்கள் மீது அவதுாறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி எஸ்.பி.,யிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. இது குறித்து மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர் தலைமையில் அக்கட்சியினர் அளித்த புகார் மனு: ம.தி.மு.க., பொதுச் செயலாளர் வைகோ, முதன்மைச் செயலாளர் துரை ஆகியோர் மீது கட்சி விதிகளுக்கும், சட்ட திட்ட விதிகளுக்கு நேர்மாறாக சில நாட்களாக யூ டியூப் உள்ளிட்ட பல்வேறு சமூக ஊடகங்களில் அவதுாறான கருத்துகள் பரப்பபட்டு வருகிறது. மேலும் கட்சிக் கொடியை அவமதிக்கும் விதமாகவும், ஜாதிய வன்மத்தைத் துாண்டி கலவரத்தை ஏற்படுத்தும் விதமாகவும் செயல்படுகின்றனர். இதுபோன்று ம.தி.மு.க., தலைவர்கள் மீது விஷம கருத்துகளை வெளியிட்டு பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்படும் வல்லம் பசீர், நாஞ்சில் சம்பத், திருப்பூர் துரைசாமி, மல்லை சத்யா ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், யூ டியூபில் அவர்கள் பேசிய வீடியோக்களை நீக்கம் செய்ய வேண்டும். இவ்வாறு புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.
23-Jul-2025