உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மாற்றுத் திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

மாற்றுத் திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கச்சேரி சாலையில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு, சங்க மாவட்ட துணைத் தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். பொருளாளர் மீனாட்சி முன்னிலை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர்கள் செல்வம், சிவலிங்கம், கொளஞ்சி, மாயகிருஷ்ணன், சுதா மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில், ஆந்திரா மாநிலத்தைப் போல் மாற்றுத் திறனாளிகளுக்கு உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் துறை மூலமாகவே உதவித்தொகை வழங்க வேண்டும். உதவித்தொகை வேண்டி பதிவு செய்து காத்திருப்பவர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !