உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மாற்றுத்திறனாளி, முதியோர் தேவை கண்டறியும் முகாம்

மாற்றுத்திறனாளி, முதியோர் தேவை கண்டறியும் முகாம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் மாநில ஊரக வாழ்வாதார இயக்க மகளிர் திட்டம் சார்பில் மாற்றுத்திறனாளிகள், முதியோர்களுக்கான தேவை கண்டறியும் முகாம் நடந்தது.வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் நடந்த முகாமிற்கு, உதவி திட்ட அலுவலர் சம்பத்குமார் தலைமை தாங்கினார்.முகாமில், மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியோர்கள், பெட்டிக்கடை வைக்க உதவுதல், தையல் இயந்திரம், பேட்டரி வாகனங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 122 மனுக்களை வழங்கினர்.தொடர்ந்து மனுக்கள் தொடர்பான துறை அலுவலர்களுக்கு அனுப்பி வைத்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது. முகாமில் முடநீக்கியல் வல்லுநர் பிரபாகரன், செயல் திறன் உதவியாளர் முனுசாமி, வட்டார இயக்க மேலாளர் சதீஷ்குமார் உட்பட பலர் பங்கேற்றன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை