உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ரிஷிவந்தியத்தில் மானிய விலையில் மக்காச்சோள விதை விநியோகம்

ரிஷிவந்தியத்தில் மானிய விலையில் மக்காச்சோள விதை விநியோகம்

ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் ஒன்றியத்தில் மானிய விலையில் மக்காச்சோள விதை, உயிர் உரம், இடுபொருட்கள் வழங்கப்பட உள்ளதாக வேளாண்மை உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார். ரிஷிவந்தியம் வேளாண்மை உதவி இயக்குநர் ஷியாம்சுந்தர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு; குறுகிய கால பயிராகவும், நீர்பாசனம் குறைவாகவும் உள்ள பயிராக மக்காச்சோளம் உள்ளது. கனிசமான லாபம் கிடைக்கும் என்பதால் ரிஷிவந்தியம் பகுதி விவசாயிகள் பரவலாக மக்காச்சோளம் பயிரினை சாகுபடி செய்து வருகின்றனர். இந்நிலையில், வேளாண்மை துறை சார்பில், தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் மக்காச்சோளம் பயிர் செய்யும் விவசாயிகளுக்கு மானிய விலையில் வீரிய ஒட்டு ரக மக்காச்சோளம் விதை, உயிர் உரங்கள், மண்வளம் மேம்பாட்டுக்கான இயற்கை இடுபொருட்கள் மற்றும் நானோ யூரியா அடங்கிய தொகுப்பு பொருட்கள் வழங்கப்பட உள்ளது. இதற்காக, மக்காச்சோளம் பயிரிட்டுள்ள விவசாயிகளின் விபரம் பதிவு செய்யப்பட்டு வருகிறது. தொகுப்பு பொருட்கள் பெற விரும்பும் விவசாயிகள், தங்கள் பகுதியில் உள்ள உதவி வேளாண் அலுவலர்களிடம் ஆதார் கார்டு நகல், சிட்டா, வங்கி புத்தகம் நகல், புகைப்படம் ஆகியவற்றை வழங்கி முன்பதிவு செய்ய வேண்டும். கூடுதல் விபரங்களுக்கு, ரிஷிவந்தியம் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ