உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / அரசு பள்ளி மாணவர்களின் மாவட்ட கலை திருவிழா

அரசு பள்ளி மாணவர்களின் மாவட்ட கலை திருவிழா

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடந்த மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகளை கலெக்டர் பார்வையிட்டார்.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்திட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கடந்த 14 முதல் இன்று 18ம் தேதி வரை கலைத் திருவிழா நடக்கிறது. மாவட்ட அளவிலான இப்போட்டிகளில் முதலிடம் பெறும் மாணவர்கள் மாநில அளவிலான போட்டிகளின் பங்கேற்பர்.கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி ஆர்.கே.எஸ்., கல்லுாரியில், நடந்த கலைத்திருவிழா போட்டிகளை கலெக்டர் பிரசாந்த் பார்வையிட்டு, சிறப்பாக பங்கேற்ற மாணவர்களை பாராட்டினார். மேலும் மாணவர்களின் கலைத்திறனை வளர்த்திடவும், தனித்திறமையை ஊக்குவிக்கவும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தினார்.சி.இ.ஓ., கார்த்திகா, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவி திட்ட அலுவலர் மணி, டி.இ.ஓ., ரேணுகோபால் மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !