தி.மு.க பட்ஜெட் விளக்க பொதுகூட்டம்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடக்க உள்ளதாக, உதயசூரியன் எம்.எல்.ஏ., தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கை:வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா மற்றும் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நடக்கிறது. அதன்படி, இன்று உளுந்துார்பேட்டை மேற்கு ஒன்றியம், மறுநாள் 30ம் தேதி திருநாவலுார் மேற்கு ஒன்றியம், தொடர்ந்து, 31ம் தேதி சின்னசேலம் பேரூராட்சி, வரும் ஏப்., 5 ம் தேதி திருவெண்ணெய்நல்லுார் கிழக்கு ஒன்றியம், வரும், 6 ம் தேதி உளுந்துார்பேட்டை கிழக்கு ஒன்றியத்தில் நடக்கிறது. தொடர்ந்து 10ம் தேதி சங்கராபுரம் பேரூராட்சி, 11ம் தேதி உளுந்துார்பேட்டை நகரம், 12 ம் தேதி கள்ளக்குறிச்சி வடக்கு ஒன்றியம், 13 ம் தேதி சங்கராபுரம் தெற்கு ஒன்றியம், 19 ம் தேதி திருநாவலுார் கிழக்கு ஒன்றியம், 20ம் தேதி சின்னசேலம் வடக்கு ஒன்றியம், 27 ம் தேதி வடக்கனந்தல் பேரூராட்சி, வரும் மே 3ம் தேதி கல்வராயன் மலை வடக்கு, 4ம் தேதி கல்வராயன் மலை தெற்கு ஒன்றியத்தில் பொதுக்கூட்டம் நடக்கிறது.