உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ஆட்டோ ஸ்டாண்டுக்கு இடவசதி கலெக்டரிடம் டிரைவர்கள் மனு

ஆட்டோ ஸ்டாண்டுக்கு இடவசதி கலெக்டரிடம் டிரைவர்கள் மனு

கள்ளக்குறிச்சி: மேல்சிறுவள்ளூர் கூட்ரோடு பகுதியில் ஆட்டோ ஸ்டாண்டுக்கு இடவசதி கேட்டு ஆட்டோ டிரைவர்கள், கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். மேல்சிறுவள்ளூர் கூட்ரோடு அன்புதானி ஆட்டோ உரிமையாளர்கள் மற்றும் டிரைவர்கள் சங்கம் சார்பில் அளித்த மனு:வாணாபுரம் அடுத்த மேல்சிறுவள்ளூர் கூட்ரோடு பகுதியில் பல ஆண்டுகளாக 20க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயங்கி வருகிறது. ஆட்டோ டிரைவர்கள் அனைவரும் ஒற்றுமையாக ஒரே இடத்தில் சாலையோரம் ஆட்டோவை நிறுத்தி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாடிக்கையாளர்களை சவாரி ஏற்றிச் செல்வது என சங்கத்தின் மூலம் முடிவு செய்து செயல்பட்டு வருகிறோம்.இந்நிலையில், சாலையோரம் ஆட்டோக்களை நிறுத்தும் போது எங்களுக்கு மட்டுமின்றி, கடை வியாபாரிகள் மற்றும் போக்குவரத்துக்கும் இடையூறாக இருக்கிறது.எனவே, அருள்பாடி சாலையில், அரசுக்கு சொந்தமான காலி இடத்தில் குடிநீர் வசதியுடன் ஆட்டோ ஸ்டாண்ட் அமைக்க இடவசதி செய்து தர வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி