போதை விழிப்புணர்வு கருத்துரு வரவேற்பு
கள்ளக்குறிச்சி: மாவட்டத்தில் தனியார் தொண்டு நிறுவனங்கள் போதைப்பொருட்கள் ஒழிப்பு மற்றும் பாதிப்புகள் குறித்த கருத்துருவை சமர்ப்பிக்கலாம் என கலெக்டர் பிரசாந்த் தெரிவித்துள்ளார். அவர் விடுத்த செய்திக்குறிப்பு : போதைப்பொருள் ஒழிப்பு, விழிப்புணர்வு ஏற்படுத்த 'நாஷா முக்த் பாரத் அபியான்' திட்டத்தில் ரூ.10 லட்சம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, போதைப்பொருட்கள் ஒழிப்பு மற்றும் பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லுாரி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, அனுபவம் மற்றும் விருப்பமுள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தங்களது கருத்துருவை கள்ளக்குறிச்சி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் வரும் 27ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இது தொடர்பான விபரங்களை கள்ளக்குறிச்சி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, எண்:39/40, எஸ்.எம்.ஜி., இல்லம், நேப்பால் தெரு, கள்ளக்குறிச்சி 606 202 என்ற முகவரியில் நேரில் கேட்டறியலாம்.மேலும், 04151 225600, 63691 07620 ஆகிய தொலைபேசி எண் மற்றும் gmail.comஎன்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.