உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மொபட் மோதி முதியவர் பலி

மொபட் மோதி முதியவர் பலி

சின்னசேலம்: சின்னசேலம் அருகே மொபட் மோதிய விபத்தில் அடையாளம் தெரியாத முதியவர் இறந்தார். சின்னசேலம் அடுத்த தாகம்தீர்த்தாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன், 60; இவர் கடந்த 4ம் தேதி இரவு 8:00 மணிக்கு, மொபட்டில் சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சென்றார். பூண்டி தனியார் பள்ளி அருகே சென்றபோது முன்னால் நடந்து சென்ற 60 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத நபர் மீது மொபட்டில் மோதினார். இதில் அடையாளம் தெரியாத முதியவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்த புகாரின் பேரில், சின்னசேலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை