மேலும் செய்திகள்
மயங்கி விழுந்த முதியவர் உயிரிழப்பு
25-Feb-2026
கள்ளக்குறிச்சி: எலவனாசூர்கோட்டை அருகே கால் வழுக்கி கீழே விழுந்து காயமடைந்த முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உளுந்துார்பேட்டை அடுத்த எறையூர் கிராமத்தை சேர்ந்தவர் மத்தேயு, 71; இவர் கடந்த ஜனவரி மாதம் 23ம் தேதி வீட்டில் நடந்து சென்ற போது கால் வழுக்கி கீழே விழுந்தார். இதில் தலைப்பகுதியில் காயம் ஏற்பட்ட மத்தேயுவை அவரது குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி மத்தேயு நேற்று உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில் எலவனாசூர்கோட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
25-Feb-2026