உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பைக் மோதி மூதாட்டி பலி

பைக் மோதி மூதாட்டி பலி

சின்னசேலம்; தென்தொரலுார் கிராமத்தில் சிறுவன் ஓட்டி வந்த பைக் மோதியதில் மூதாட்டி இறந்தார். சின்னசேலம் அடுத்த தென்தொரசலுார் கிராமத்தைச் சேர்ந்தவர் ரங்கசாமி மனைவி தங்கம்மாள், 65; விவசாய கூலித் தொழிலாளி. இவர், கடந்த 9ம் தேதி காலை 10:00 மணியளவில் 100 நாள் வேலைக்காக தென்தொரசலுார் குளம் அருகே சென்றபோது எதிரே காட்டனந்தல் கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுவன் ஓட்டி வந்த பைக், தங்கம்மாள் மீது மோதியது. இதில் படுகாயமடைந்ந தங்கம்மாள் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றவர் நேற்று மாலை இறந்தார். புகாரின் பேரில், சின்னசேலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி