டிராக்டர் மோதி மூதாட்டி பலி
கள்ளக்குறிச்சி: டிராக்டர் டிப்பர் மோதிய தில் மூதாட்டி உயிரிழந்தார்.கள்ளக்குறிச்சி அடுத்த அசகளத்துாரை சேர்ந்தவர் கந்தன் மனைவி இளியம்மாள்,70; இவர் நேற்று காலை 7 மணியளவில் பஸ்நிறுத்தம் அருகே நடந்து சென்றார். அப்போது, மலைக்கோட்டாலத்தை சேர்ந்த முனியன் மகன் சரவணன்,20; ஓட்டி சென்ற டிராக்டர் டிப்பர் சாலையின் மேடு பகுதியில் ஏற முடியாமல் பின்னோக்கி சென்று, இளியம்மாள் மீது மோதியது.அதில் படுகாயமடைந்த இளியம்மாள் சம்பவ இடத் திலேயே உயிரிழந்தார்.வரஞ்சரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.