உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கிணற்றில் விழுந்த மூதாட்டி உயிரிழப்பு

கிணற்றில் விழுந்த மூதாட்டி உயிரிழப்பு

ரிஷிவந்தியம் : ரிஷிவந்தியத்தில் கிணற்றில் விழுந்த மூதாட்டி உயிரிழந்தார். ரிஷிவந்தியத்தை சேர்ந்த கதிர்வேல் மனைவி குப்பு, 85; இவருக்கு வயது முதிர்வு காரணமாக கண்பார்வை குறைந்தது. இதனால் கடந்த ஒரு வாரத்திற்கு முன் குப்புவிற்கு கண் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. நேற்று முன்தினம் வீட்டில் இருந்து வெளியில் சென்ற குப்பு, கால் தவறி 50 அடி ஆழம் கொண்ட விளை நில கிணற்றில் விழுந்து இறந்தார். ரிஷிவந்தியம் தீயணைப்புதுறை வீரர்கள் மூதாட்டி குப்புவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை