மேலும் செய்திகள்
கோவில் சிலை சேதம் ஒருவர் கைது
27-Dec-2024
கச்சிராயபாளையம்; ஆழ்துளை கிணற்றில் மின் மோட்டார் மற்றும் ஒயரை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடிவருகின்றனர். கச்சிராயபாளையம் அடுத்த சடையம்பட்டு காட்டுக்கொட்டாய் பகுதியில் உள்ள பிள்ளையார் கோவிலில் உள்ள ஆழ்துளை கிணற்றில் இருந்த மின் மோட்டார் கடந்த 3ம் தேதி முதல் இயங்கவில்லை. நேற்று முன்தினம் மெக்கானிக் வந்து பார்த்தபோது ஆழ்துளை கிணற்றில் இருந்த மின்மோட்டார் மற்றும் மின் ஒயரை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது.இதுகுறித்த புகாரின்பேரில் கச்சிராயபாளையம் போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.
27-Dec-2024