லஞ்சம் வாங்கிய மின்துறை அதிகாரி சஸ்பெண்ட்
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் லஞ்சம் வாங்கிய மின்வாரிய நிர்வாக மேற்பார்வையாளர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.கடலுார் மாவட்டம் மாளிகைமேடு சேர்ந்தவர் செந்தில்குமார், 50; கள்ளக்குறிச்சி, அஜீஸ்நகரில் வசிக்கிறார். இவர், இவர் கள்ளக்குறிச்சி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில், நிர்வாக மேற்பார்வையாளராக பணிபுரிந்து வந்தார்.இந்நிலையில் ஓய்வு பெறவுள்ள இளமின் பொறியாளரிடம் பணப்பலன் பெறுவதற்கான கோப்புகளை உயர் அதிகாரிகளுக்கு அனுப்ப ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கினார்.அப்போது லஞ்ச ஒழிப்பு துறை போலீசார், அலுவலகத்தில் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இதனையடுத்து, மின்வாரிய மேற்பார்வையாளர் கார்த்திகேயன், அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.