மேலும் செய்திகள்
மின் கம்பத்தில் 'ஷாக்'மின் ஊழியர் படுகாயம்
27-Mar-2025
உளுந்தூர்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே மின்சாரம் தாக்கி மின் வாரிய ஊழியர் படுகாயமடைந்தார். உளுந்தூர்பேட்டை தாலுகா புகைப்பட்டியை சேர்ந்தவர் பெரியசாமி, 53; மின்வாரிய ஊழியர். இவர் எறையூர் துணை மின் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். நேற்று காலை 11:00 மணியளவில், பு. கொணலவாடி கிராம மின் கம்பத்தில் ஏற்பட்ட பழுதை சரி செய்து போது, அவரை மின்சாரம் தாக்கியது. இதில் பலத்த காயம் அடைந்தவரை அருகில் இருந்தவர்கள் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். உளுந்துார்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.
27-Mar-2025