உள்ளூர் செய்திகள்

வேலைவாய்ப்பு முகாம்

கள்ளக்குறிச்சி : கலெக்டர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு; கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், தச்சூர் பாரதி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் ஆக.2ம் தேதி நடக்கிறது. காலை 9:00 முதல் மதியம் 3:00 மணி வரை நடக்கும் முகாமில், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு நேர்காணல் நடத்துகின்றன.8ம் வகுப்பு, 10ம் வகுப்பு தேர்ச்சி, தோல்வி, பிளஸ் 2, ஐ.டி.ஐ. டிப்ளமோ, அக்ரி, செவிலியர், ஆசிரியர் தகுதி, ஹோட்டல் மேனேஜ்மென்ட், இளநிலை, முதுநிலை பட்டப்படிப்புகள் மற்றும் பொறியியல் பட்டப்படிப்புகள் போன்ற கல்வித் தகுதி உடைய 18 வயது முதல் 40 வயதிற்குட்பட்டவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். பங்கேற்க விரும்பும் நபர்கள் பயோ டேட்டா, கல்விச் சான்றுகளின் நகல்கள், ஆதார் கார்டு, பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் நேர்காணலில் கலந்துகொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 04151 - 295422, 245246 ஆகிய தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ