உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பாலிடெக்னிக் கல்லுாரியில் சமத்துவ பொங்கல் விழா

பாலிடெக்னிக் கல்லுாரியில் சமத்துவ பொங்கல் விழா

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி அடுத்த மேலுார் முருகா பாலிடெக்னிக் கல்லுாரியில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. விழாவிற்கு கல்லுாரி தாளாளர் ரஹமத்துல்லா தலைமை தாங்கினார்.தலைவர் ஜெகநாதன், செயலாளர் அல்லாபக்ஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லுாரி தலைவர் ் பாஸ்கர் வரவேற்றார். கல்லுாரி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடினர். தொடர்ந்து கல்லுாரி மாணவர்களுக்கு பொங்கல் விழா போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் கல்லுாரியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை