உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மாற்றுத்திறனாளிகளுக்கு வசதிகள்; கலெக்டர் ஆலோசனை

மாற்றுத்திறனாளிகளுக்கு வசதிகள்; கலெக்டர் ஆலோசனை

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில்,மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் ஓட்டுச்சாவடியில் சிரமமின்றி ஓட்டளிக்க தேவையான வசதிகளை ஏற்படுத்து குறித்து கலெக்டர் பிரசாந்த் தலைமையில் மாவட்ட கண்காணிப்பு குழு கூட்டம் நடந்தது.இதில், இந்திய தேர்தல் ஆணையம் மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி ஓட்டளிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, அவர்களை அடையாளம் கண்டு வாக்காளர் பட்டியலில் குறியீடு செய்ய வேண்டும். வாக்காளர்களாக பதிவு செய்யாத மாற்றுத்திறனாளிகளைக் கண்டறிந்து வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும். மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்கு ஓட்டுப்பதிவின் போது உரிய அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.மேலும் அவர்கள் தேர்தலின்போது எவ்வித சிரமமின்றி ஓட்டளிக்க தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தர சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.கூட்டத்தில் டி.ஆர்.ஓ., ஜீவா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் தனலட்சுமி, ஆர்.டி.ஓ., லுார்துசாமி, சி.இ.ஓ., கார்த்திகா, தேர்தல் தாசில்தார் பரந்தாமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை