குடும்ப அட்டை குறைதீர் முகாம்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மற்றும் வாணாபுரத்தில் நடந்த குடும்ப அட்டை குறைதீர் சிறப்பு முகாம்களில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.கள்ளக்குறிச்சி தாலுகா அலுவலகத்தில், குடிமைப்பொருள் தனி தாசில்தார் அலுவலகத்தில் பொது வினியோக திட்டத்தின் கீழ் குடும்ப அட்டை குறைதீர் சிறப்பு முகாம் நேற்று நடந்தது. தனி தாசில்தார் சரவணன் தலைமை தாங்கினார். முகாமில், குடும்ப அட்டையில் புதிய உறுப்பினர் சேர்த்தல், பெயர் நீக்குதல், முகவரி மாற்றம், பெயர் திருத்தம், மொபைல் எண் மாற்றம் தொடர்பாக 28 மனுக்கள் பெறப்பட்டு, உடனடி தீர்வு காணப்பட்டது. இளநிலை வருவாய் ஆய்வாளர் ஜெயஸ்ரீ உட்பட பலர் உடனிருந்தனர்.அதேபோல, வாணாபுரம் தாலுகா அலுவலகத்தில் நடந்த முகாமில், 48 மனுக்கள் பெறப்பட்டு, அனைத்திற்கும் உடனடி தீர்வு காணப்பட்டது. முகாமில், இளநிலை வருவாய் ஆய்வாளர் பழனி, தனி வருவாய் ஆய்வாளர் கார்மேகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.