உள்ளூர் செய்திகள்

விவசாயி தற்கொலை

ரிஷிவந்தியம் : வாணாபுரம் அருகே, பூச்சிக்கொல்லி மருந்து குடித்தவர் உயிரிழந்தார்.வாணாபுரம் அடுத்த எகால் கிராமத்தை சேர்ந்தவர் மூப்பன் மகன் பாலமுருகன்,30; விவசாயி. கடந்த, 28ம் தேதி, தந்தை கண்டித்ததால், பூச்சிக்கொல்லி மருந்து குடித்தவர், சங்கராபுரம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேல் சிகிச்சைக்கு ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். பகண்டைகூட்ரோடு போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி