உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / அடையாள அட்டை பெற விவசாயிகளுக்கு அழைப்பு

அடையாள அட்டை பெற விவசாயிகளுக்கு அழைப்பு

தியாகதுருகம் : தியாகதுருகம் பகுதியில் அடையாள அட்டை பெறாத விவசாயிகள் உடனடியாக பதிவு செய்து கொள்ள, வேளாண் உதவி இயக்குனர் (பொறுப்பு) ரகுராமன் அழைப்பு விடுத்துள்ளார். அவர் விடுத்த செய்திக்குறிப்பு: தியாகதுருகம் வட்டாரத்தில் வேளாண்துறை மூலம் விவசாயிகளுக்கு அடையாள எண் வழங்கும் பணி நடந்து வருகிறது. உதவி வேளாண் அலுவலர்கள், தோட்டக்கலை அலுவலர்கள், ஆத்மா திட்ட பணியாளர்கள், பயிர் அறுவடை பரிசோதனை அலுவலர்கள், மகளிர் திட்ட பயிற்றுநர்கள் ஆகியோர் மூலம் முகாம் நடத்தி விவசாயிகளின் முழு விபரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் பொது சேவை மையங்களிலும் பதிவேற்றம் செய்யப்படுகிறது.வரும், 30ம் தேதிக்குள் தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு அடையாள அட்டை வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.வரும் காலங்களில் அரசு துறை சார்ந்த திட்டங்கள், பிரதம மந்திரியின் ஊக்க தொகை உள்ளிட்டவர்களை பெற விவசாய அடையாள எண் அவசியமாகிறது. இதனால் விவசாயிகள் தங்களின் நிலம் தொடர்பான ஆவணங்களுடன் ஆதார் அட்டை தொலைபேசி எண் ஆகியவற்றுடன் முகாம் நடைபெறும் இடத்தில் அல்லது அரசு அலுவலர்களை தொடர்பு கொண்டு பதிவேற்றம் செய்து பயன் அடையலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ