தென்பெண்ணை ஆற்றின் கரையோர மக்களுக்கு வௌ்ள அபாய எச்சரிக்கை
திருக்கோவிலுார்: சாத்தனுார் அணையில் இருந்து அதிகளவு தண்ணீர் திறப்பதால், தென்பெண்ணை ஆற்றில் கூடுதல் நீர்வரத்து துவங்கியுள்ளது. தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே தமிழக எல்லையில் கெல வரப்பள்ளி, கிருஷ்ணகிரி அணைகளை கடந்து திருவண்ணாமலையில் சாத்தனுார் அணை உள்ளது. தற்போது பெய்து வரும் கனமழையின் காரணமாக சாத்தனுார் அணைக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையின் மொத்த கொள்ளளவான 119 அடியில் (7,321 மில்லியன் கன அடி நீர்) அணையின் பாதுகாப்பு கருதி 114 அடி நீர் பராமரிக்கப் பட்டு வருகிறது. நேற்று காலை நிலவரப்படி அணையில் 114.05 அடி (6,242 மில்லியன் கன அடி நீர்) இருப்பு உள்ளது. அணைக்கு வினாடிக்கு 950 கன அடியாக நீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்த நீர் முழுவதுமாக அப்படியே வெளியேற்றப்படுகிறது. இதன் காரணமாக தென்பெண்ணையாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட தென்பெண்ணை ஆற்றின் நீர் பிடிப்பு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக அணைக்கான நீர்வரத்து மேலும் அதிகரிக்க கூடும் என்பதால் சாத்தனுார் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவும் அதற்கேற்ப அதிகரிக்கப்படும். இதன் காரணமாக தென்பெண்ணை ஆற்றில் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலு ார் பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ கூடாது என வருவாய்த்துறையினர் எச்சரித் துள்ளனர்.