மேலும் செய்திகள்
பழமொழி : மதியார் வாசலை மிதியாதிருப்பதே உத்தமம்.
07-Oct-2025
சங்கராபுரம்: செம்பராம்பட்டு கிராமத்தில் காய்ச்சல் தடுப்பு முகாம் நடந்தது. வடகிழக்கு பருவ மழை பெய்து வருகிறது. இதனால் சங்கராபுரம் அடுத்த செம்பராம்பட்டு கிராமத்தில் கடந்த சில நாட்களாக ஏராளமான மக்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். இது குறித்து தகவல் அறிந்த கலெக்டர் பிரசாந்த், கிராமத்தில் மருத்துவ முகாம் நடத்த உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து, செம்பராம்பட்டு கிராமத்தில் காய்ச்சல் தடுப்பு முகாம் நேற்று நடந்தது. ஊராட்சி தலைவர் மாயக்கண்ணன் தலைமை தாங்கினார். டாக்டர் சுகன்யா தலைமையிலான மருத்துவ குழுவினர் பொதுமக்களுக்கு பரிசோதனை செய்து சிகிச்சை அளித்தனர். முகாமில் காய்ச்சல் தடுப்பு மாத்திரைகள், நிலவேம்பு குடிநீர், உப்பு சர்க்கரை கரைசல் போன்ற தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டது. பள்ளி மாணவர்களுக்கு டெங்கு குறித்த விழிப்புணர்வு வழங்கப்பட்டது. வீடு வீடாக சென்று கொசு ஒழிப்பு பணி, கிரிமி நாசினி செய்தல், குடிநீரில் குளோரீன் செய்தல் உள்ளிட் பணிகள் மேற்கொள்ளப்பட்டது. முகாமில், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சரவணன், சுகாதார ஆய்வாளர் பாசில், செவிலியர் சிவசக்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஊராட்சி செயலாளர் ராஜா நன்றி கூறினார்.
07-Oct-2025