மேலும் செய்திகள்
வைணவ மாநாடு
14-May-2025
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் நடந்த உணவுத்திருவிழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.கள்ளக்குறிச்சி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், உணவுத்திருவிழா கலெக்டர் பிரசாந்த் தலைமையில் நேற்று நடந்தது.ஒருங்கிணைந்த கல்லை வேளாண் சங்கம் மற்றும் விவசாயிகள் ஒருங்கிணைந்து, இயற்கை விவசாயம் மற்றும் உணவுப் பொருட்களை ஊக்குவிக்கும் வகையில் விழா நடத்தப்பட்டது. பள்ளி மாணவ, மாணவியரின் சிலம்பாட்டம், வாள் சண்டை உள்ளிட்ட விளையாட்டுகள் நடந்தன.இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட உணவுப் பொருட்களின் கண்காட்சி அரங்குகள் மற்றும் விற்பனை நிலையங்களை கலெக்டர் பார்வையிட்டார். நிகழ்ச்சியில் வேளாண் இணை இயக்குநர் சத்தியமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
14-May-2025