உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / தீண்டாமை ஒழிப்பு முன்னணி போராட்டம்

தீண்டாமை ஒழிப்பு முன்னணி போராட்டம்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி, கச்சேரி சாலையில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் கோரிக்கை முழுக்க போராட்டம் நடந்தது. மாநில துணைத்தலைவர் ஆனந்தன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் பாஸ்கர், துணை செயலாளர் தங்கபாண்டியன் முன்னிலை வகித்தனர். இதில், சாதி வாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த வேண்டும்; தனியார் துறைகளில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.மா.கம்யூ., மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர், விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஏழுமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை