உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / காஸ் சிலிண்டர் பயன்பாடு விழிப்புணர்வு நிகழ்ச்சி 

காஸ் சிலிண்டர் பயன்பாடு விழிப்புணர்வு நிகழ்ச்சி 

சங்கராபுரம்: சங்கராபுரம் அடுத்த தேவபாண்டலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், காஸ் சிலிண்டரை பாதுகாப்பாக பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. சங்கராபுரம் சுதர்சன் காஸ் நிறுவனம் சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியை (பொறுப்பு) டயானா தலைமை தாங்கினார். வட்ட வழங்கல் அலுவலர் திருமலை, நுகர்வோர் சங்கத் தலைவர் மணி முன்னிலை வகித்தனர். காஸ் நிறுவன மேலாளர் பிரபாகரன் சிலிண்டரை பாதுகாப்பாக பயன்படுத்துவது குறித்து செயல்முறை விளக்கம் அளித்தார். நிகழ்ச்சியில், மாணவிகள் 300 பேர் பங்கேற்றனர். காஸ் நிறுவன காசாளர் ராஜராஜன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை