உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / உளுந்துார்பேட்டை வார சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை

உளுந்துார்பேட்டை வார சந்தையில் ரூ.2 கோடிக்கு ஆடுகள் விற்பனை

உளுந்தூர்பேட்டை ; தீபாவளி பண்டிகையையொட்டி, உளுந்தூர்பேட்டை வார சந்தையில் ரூ. 2 கோடி மதிப்பில் ஆடுகள் விற்பனையானது.கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையிலுள்ள சேலம் சாலையில் புதன்கிழமை தோறும் ஆட்டு வாரசந்தை நடந்து வருகிறது. தீபாவளி பண்டிகையையொட்டி வார சந்தைக்கு நேற்று ஆடுகள் அதிக அளவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. வியாபாரிகளும் அதிக அளவில் வந்திருந்தனர். இதனால் ஆடுகளின் விலையும் அதிகரித்ததால் ஆட்டின் உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஒரு ஆட்டின் விலை குறைந்தபட்சமாக ரூ.2 ஆயிரத்து 500லிருந்து அதிகபட்சமாக ரூ.25 ஆயிரம் வரை விற்பனையானது. நேற்று ரூ.2 கோடி அளவுக்கு ஆடுகள் விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ