உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / வீரட்டானேஸ்வரருக்கு தங்க நாகாபரண கவசம்

வீரட்டானேஸ்வரருக்கு தங்க நாகாபரண கவசம்

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவில் மூலவருக்கு தங்க முலாம் பூசிய நாகாபரண கவசம் அணிவிக்கப்பட்டது.அட்டவீரட்டானங்களில் ஒன்றான திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவில் பாடல் பெற்ற புண்ணிய ஸ்தலமாகும். கோவிலுக்கு வேண்டுதலுடன் வரும் பக்தர்களுக்கு உடனுக்குடன் தீர்வு கிட்டும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. அந்த வகையில் குமாரபாளையத்தை சேர்ந்த சவுண்டப்பன், டாக்டர் நிர்மலா தம்பதிகளின் பிரார்த்தனை காணிக்கையாக ரூ. 20 லட்சம் மதிப்பில் மூலவர் வீரட்டானேஸ்வரருக்கு தங்கமுலாம் பூசிய நாகாபரண கவசம் வழங்கப்பட்டது.கோவில் நிர்வாகத்தின் சார்பில் மூலவருக்கு விசேஷ அபிஷேகம் செய்யப்பட்டு, தங்க நாகா பரண கவசம் சாந்தி மகா தீபாராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி