மேலும் செய்திகள்
எஸ்.வி.ஜி.வி., பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி
17-May-2025
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அரசு உயர்நிலைப்பள்ளி, 10,ம் வகுப்பு தேர்வில், 100 சதவீத தேர்ச்சி பெற்றது. விழுப்புரம் மாவட்டம், சு.பில்ராம்பட்டு அரசு உயர்நிலை பள்ளியில், 49 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில், அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றனர். பள்ளியில் சரண்யா, 476; ருத்ரா, 474; நிவேதா, 473; ஆகிய மதிப்பெண்கள் பெற்றனர். மேலும், 20 மாணவர்கள், 400 மதிப்பெண்களுக்கு மேல் குவித்தனர். இதேபோல அறிவியல் பாடத்தில், 3 பேர்; சமூக அறிவியலில் ஒருவர்; என மொத்தம், 4 பேர் 'சென்டம்' எடுத்தனர். தமிழ் பாடப்பிரிவில், 5 பேர், 98 மதிப்பெண்கள் பெற்றனர். தொடர்ந்து, 2வது ஆண்டாக, இந்த பள்ளி, 100 சதவீத தேர்ச்சி இலக்கை எட்டி உள்ளது. அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் செந்தில்குமார் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர். மேலும் கிராம மக்கள், பள்ளி ஆசிரியர்களை பாராட்டி சால்வை அணிவித்தனர்.
17-May-2025